Saturday, October 23, 2010

அசோகா


நான் கொடுக்கும் முதல் குறிப்பு . எல்லோருக்கும் பிடித்து இருந்தால் என் சமையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் அடிக்கடி செய்யும் ஸ்வீட் அசோகா தஞ்சாவூர் பக்கம் மிகவும் பிரபலமான ஸ்வீட் , இங்கு நடக்கும் எல்லோர் வீட்டு திருமணத்திலும் கட்டாயம் இடம் பெரும் ஒரு ஸ்வீட்

தேவையான பொருள்கள் :

பாசிபருப்பு : 1/4 கிலோ
கோதுமை மாவு : 100 கிராம்
சீனி : 1/2 கி
நெய் : 200 மிலி
சமையல் எண்ணெய் : 100 மிலி
முந்திரி பருப்பு : 10
அசோகா கலர் பவுடர் : சிறிது

பொருட்களின் அளவுகள் தோராயமாக தான் போட்டு இருக்கேன் , எங்க அண்ணன் திருமணத்திற்கு சமையல் செய்தவர் சொன்ன அளவுகள் ஒரு பங்கு பாசிபருப்புக்கு,3 பங்கு சர்க்கரை, 3 பங்கு நெய் ஆனால் அது ரொம்ப திகட்டும் 2 to 2 1/2 போட்டா சரியா இருக்கும்

செய்முறை :

பாசிபருப்பை நல்ல சிவக்க வறுத்து , குழைய வேக வைத்து கொள்ளவும் . அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்து கொள்ளவும் பச்சை வாசனை போனவுடன் , வேக வைத்த பாசிபருப்பை போட்டு கிளரவும் சிறிது நேரத்திற்கு பிறகு சீனியை போட்டு கிளரவும்.கலர் பவுடரையும் சேர்த்து கொள்ளவும் சீனி கரைந்தவுடன் ,சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கிளறவும் சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தால் நாம் ஊற்றிய நெய் கொப்பளிக்கும் விடாமல் கிளறவும் பதம் வந்தவுடன் வறுத்து வைத்த முந்திரியை போட்டு அலங்கரிக்கவும் , செய்வது மிகவும் எளிது . செய்து சுவத்து பாருங்கள்.



Thanks to google image.

நெட்ல இருந்து எடுத்த புகைப்படம். அடுத்த முறை அசோகா செய்யும் போது புகைபடம் எடுத்து போடுகிறேன்



8 comments:

  1. நல்ல குறிப்பு.

    ReplyDelete
  2. முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்!! இனி தொடர்ந்து அசத்துங்க..சூப்பர்ர் ஸ்வீட்!!

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சாரு,சீக்கிரமா உங்க வீட்டு அல்வா படம் போடுங்க.

    எல்லாருக்கும் அல்வா குடுத்து சமையல்குறிப்புகளை ஆரம்பிச்சிருக்கீங்க. :) ;) இனி அடிக்கடி அல்வா குடுங்க! ஹிஹி!

    ReplyDelete
  4. இது இங்க சைனீஸ் கடைல கிடைக்கிற 'முங் கேக்' மாதிரியே இருக்கு சாரு.

    மகி கிண்டல் பண்றாங்க. சீக்கிரம் அல்வா படம் போட்டுருங்க. ;)

    ReplyDelete
  5. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி . ம்ஹி கட்டாயம் தீபாவளிக்கு எடுத்து போடுகிறேன். அப்படியா இமா அம்மா அப்போ நான் சைனீஸ் சமையல் எல்லாம் செய்கிறேன் .

    ReplyDelete
  6. wow romba nalla eruku ...its been a long time i tried...

    ReplyDelete
  7. Superba irukku saru asoka....seythu paarkkiren.

    ReplyDelete
  8. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete