Monday, December 6, 2010

எனக்கு பிடித்த பாடல்.

எனக்கு பிடித்த 10 பாடல்கள் தொடர் பதிவு எழுத சாதிகா அக்கா அழைத்து இருந்தாங்க ஏற்கனவே எனக்கு பிடித்த பாடல்கள் எல்லோரும் எழுதியீருக்காங்க பெரும்பாலும் எல்லோராலும் விரும்ப படும் பாடல் தான் எல்லாப் பாடலுமே யூ டியுப்ல இருக்கிறதுனால லிங்க் கொடுக்கலை

நான் அடிக்கடி ஹம் பண்ணும் பாடல்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
மயக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் இடம் பெற்ற படம் வல்லவன் ஒருவன் .



செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

படம் : 16 வயதினிலே பாடியவர் : எஸ். ஜானகி

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?

படம் : கிழக்கே போகும் ரயில் : பாடியவர் : எஸ். ஜானகி

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)

படம் : ஜானி பாடியவர் : S.P.சைலஜா

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
...

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களைக்
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளியெழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட.. தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ

படம் : பன்னீர் புஷ்பங்கள் பாடியவர் : உமா ரமணன்


சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

இந்த பாட்டு எனக்கு மட்டும் அல்ல எங்க அப்பாவும் விரும்பி கேப்பாங்கள்

படம் : தளபதி பாடியவர் : எஸ். ஜானகி


இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்தப் புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட.. கலைமானாக
பார்த்தன.. ரசித்தன ஓராயிரமே

படம் : நிறம் மாறாத பூக்கள் பாடியவர் : ஜென்ஸி

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே

(ஏதேதோ)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

(ஏதேதோ)

படம் : புன்னகை மன்னன் பாடியவர் : சித்ரா.

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

படம் : சத்ரியன் பாடியவர் : ஸ்வர்ணலதா.


போராளே பொண்ணு தாயே பொழ பொழ வென்று கண்ணீர்
விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு
பால் பேச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போராளே பொட்ட புள்ள ஊரை விட்டு

சாமந்தி பூவ
ஊமதம் பூவ
கருதம்ம யெந்த பூவம்ம
அஞ்சாரு சீவை உள்ளூரில் யேங்க
பொத்தி மாட்டு வண்டி மேலே
போட்டு வேச்ச மூட்டை போலே

படம் : கருத்தம்மா பாடியவர் : ஸ்வர்ணலதா

12 comments:

  1. அருமையான பாடல்கள்.

    ReplyDelete
  2. good selection and different combination. jhonie song realy super

    ReplyDelete
  3. அழைப்பை ஏற்று உடன் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி சாரு.முதலில் தேர்ந்தெடுத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.யூ டியூபில் லின்க் கிடைக்காததால போட முடியவில்லை.உங்களுக்கு கிடைத்தால் அந்த லின்க் அனுப்பித்தாருங்கள்.ஏனைய பாட்டுக்கள் அனைத்துமே சூப்பர்.உங்கள் ரசனைக்கு ஒரு ஜே....

    ReplyDelete
  4. ஜானி-ஆசைய காத்துல..பாட்டு என் கணவரின் பேவரிட் சாரு.எல்லாப்பாடல்களும் அருமையா இருக்குது.

    ReplyDelete
  5. நன்றி
    குறிஞ்சி
    ஆசியா அக்கா
    விஜி, சித்ரா
    சுதா அண்ணன்
    ஸாதிகா அக்கா
    மகி

    ReplyDelete
  6. நல்ல பாடல்களை தெரிவு செய்து மகிழ்ந்து மற்றவர்களையும் இன்பம் காண விழைகிறீர் . பாராட்டுகள்

    ReplyDelete
  7. பாட்டுக்கள் எல்லாமே அருமையான தேர்வு . ஏதேதோ எண்ணம் & மாலையில் யாரோ ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டுக்கள்

    ReplyDelete
  8. ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
    இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

    ReplyDelete
  9. ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
    இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

    ReplyDelete