Friday, October 22, 2010

பதிவுலகில் நான்

தோழி விஜி சத்யாவின் அழைப்பு , எல்லோரும் எழுதி மறந்து விட்ட நிலையில் நான் இப்போ தான் ஆரம்பித்து இருக்கிறேன்.

1, வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர் ?

சாருஸ்ரீராஜ்

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில்
தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

முதல் பாதி என்னுடைய பெற்றோர்கள் வைத்த பெயர் (சாருலதா)
திருமணத்திற்கு பிறகு எனது கணவர் பெயர் ஸ்ரீராஜ் அதையும் சேர்த்து சாருஸ்ரீராஜ் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்,இப்போ பதிவுலக தோழிகள் சாரு அல்லது சாருஅக்கானு கூப்பிடும் போது மிகவும் சந்தோச படுகிறேன், எனக்கு ஒரு சகோதரி இல்லாத குறையை இவர்கள் தீர்த்து வைக்கிறார்கள்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி ?

நான் தமிழ் குடும்பத்தில தான் அரட்டை அடித்து கொண்டிருந்தேன், அப்போ ஒரு சில கோலங்கள் போட்டு அனுப்பினேன், அப்போ தான் பிளாக் பற்றி தெரிய வந்து ஒரு பிளாக் தொடங்கி ஒரு ரெண்டு கோலம் போட்டுட்டு அப்படியே விட்டுடேன் , அந்த முகவரியை வைத்து கீதா ஆக்ஸலின் சமையல் குறிப்புக்கு கமெண்ட் எழுதி கொண்டிருந்தேன்,அப்படியே orkutla நண்பர்கள் ஆகிவிட்டோம் ,கீதா இந்தியா வந்து இருந்த போது நீங்க கோலம் போடுங்கனு சொன்னவுடன் திரும்ப ஆரம்பித்துவிட்டேன் . முன்னாடி எல்லாம் வெட்டியா தான் உக்கார்ந்து இருந்தேன் இப்போ, நேரமே கிடைக்க மாட்டேங்குது. அதனால் தான் பதிவுகள் எல்லாம் தாமதம் .

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள் ?

நான் பிரபலம் எல்லாம் இல்லை , ஆனால் தோழி பாயிஜா ஒருமுறை சாட்டிங்கல தமிழ்மணத்துல இணைக்க சொல்லி இருந்தாப்ல அது அப்படியே விட்டுடேன் , ஆனால் ரெகுலரா எல்லோருடைய வலைப்பூக்கு போய் கமெண்ட் எழுதிவிடுவேன் நான் தவறாமல் செய்யும் ஒரு காரியம் இது தான் .

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒரு சில பதிவுகள்ல பகிர்ந்து கொண்டிருக்கேன் , இனிமேல் தொடரலாம்னு இருக்கேன்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போகலைனு தான் கோலம் போட வந்தேன் , ஆனால் ஒரு மூணு மாத காலமாக நிறைய ஆணிகள். இது மூலமா சம்பாதிக்கலாம்னு இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் , அந்தளவுக்கு நான் ஒன்னும் அறிவாளி இல்லை .

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஹி ஹி ஹி ஒன்னே ஒன்னு தான்

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

யார் மேலையும் கோபம் எல்லாம் கிடையாது ,பொறாமை பட்டதும் கிடையாது ஆனால் வியந்து இருக்கேன் எல்லோருடைய திறமையை பார்த்து சின்ன விசயத்தை கூட எவ்வளவு அழகா சொல்லுறாங்க , தினமும் செய்யும் சமையல் தான் ஆனால் அதுல கூட ஒரு புதுமை , வித்யாசம்னு உண்மையிலே வலைப்பூவில் கலக்கி கொண்டிருக்கும் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதலாக பாராட்டியது தோழி பாயிஜா தான் பிறகு கீதா அக்ஸல் ,அப்புறம் நானும் சகோதரி மல்லிகாவும் சாட் பண்ணும் போது பிளாக்ல என்ன எல்லாம் பண்ண்லாம்னு டிஸ்கஸ் பண்ணுவோம் , இப்போ அவுங்க ரொம்ப பிஸி.

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஒன்னுமில்லை ,இல்லத்தரசி , இரண்டு பெண் குழந்தைகள் எல்லோர்கிட்டையும் எளிதில் பழகிவிடுவேன் அனைவரிடமும் நட்பு வைத்து கொள்ள விரும்புவேன். பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது , கொஞ்சம் கைவேலை தெரியும்.

16 comments:

  1. அருமையான ப்கிர்வு,சாருஸ்ரீ.தொடர்ந்து அடிக்கடி எழுதுங்க.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ஆசியா அக்கா , நீங்க கொடுத்த விருதை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் , பார்த்தீங்களா.

    ReplyDelete
  3. Nice knowing about you Charu. Advance Diwali wishes

    ReplyDelete
  4. சாரு பதிவுலகில் நான் ரொம்ப ஸ்வீட்டா சொல்லிட்டீங்கள்.
    இனி உங்களை பற்றி தொடருங்கள் உங்கள் பதிவுகளை படிக்க எந்த பிஸியிலும் கடைசி டிரெயின் பிடித்தாவது வருவேன்.

    ReplyDelete
  5. நல்ல தன்னடக்கம்

    நான் உங்கள் பதிவுக்கு புதியவன் சகோதரி

    ReplyDelete
  6. மிகவும் நன்றி பத்து

    ReplyDelete
  7. ரொம்ப சந்தோசாமாக இருக்கு ஜலி அக்கா கவலைபடாதீங்க , உங்களுக்காக ஒரு ஸீட் ரிசர்வ் பண்ணிடுறேன்.

    ReplyDelete
  8. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தினேஷ் குமார்.

    ReplyDelete
  9. கோலங்கள வந்த வழியை அழகா சொலியிருக்கீங்க ..!! :-))

    ReplyDelete
  10. எளிமையான பதில்கள்..இனி அவ்வப்போது எழுதுங்கள்..உங்களைப் பற்றி அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி அக்கா...

    ReplyDelete
  11. சாரு என்ன காணமல் போயிருந்திங்க. எப்பவும் வந்து கதவை தட்டி பார்ப்பேன்.ம்ஹூம் சத்தம், ஆள் நடமட்டம் ஏதும் இல்லை.
    இன்று வந்து பார்த்த இது நம்ம சாருவா என்று வியக்க வைத்துட்டிங்க.
    நன்றி சாரு என் அழைப்பை ஏற்று உங்க அழகான எளிய நடையில் வந்து நல்ல எழுதி தள்ளிட்டிங்க. சூப்பர்.

    குழந்தைகள்,எல்லாம் செம க்யூட்.
    இனி ப்ளாக் ரெகுலரா தொடருவிங்க என்று நம்புகிறேன். ஏன் வண்டி இடையில்ப்ராக் ஆகிவிட்டதா இல்லை பிஸியா?
    சரி குட் தொடருங்கோ ப்ளாக்கை.
    வருகிறேன். மீண்டும் நன்றியோடு.பார்க்கலாம்.

    ReplyDelete
  12. எல்லாரும் மறந்த விஷயங்களை ஞாபகப்படுத்திவிடுவது நல்லதுதானே சாரு? :)
    அழகா பதில் சொல்லிருக்கீங்க.

    ReplyDelete
  13. இங்க தான் விஜி இருக்கேன் காலைல 2 மணி நேரம் கரெக்டா பவர் கட் அந்த டைம்ல தான் பிளாக் பார்குறது சாய்ந்தரம் பசங்களோட படிப்பு , மீதம் இருக்கும் நேரத்தில் தான் மற்ற தோழிகள் பிளாக் படிக்க கமெண்ட் போட டைம் சரியா இருக்கு ,இடையே எதாவது தேவைகள் அதனால் தான் போஸ்ட் பண்ணுறது இல்லை , இனிமேல் ரெகுலரா வருவேன்.

    ReplyDelete
  14. நன்றி மஹி ஆமாம் நீங்கள் சொல்றது சரி தான் மத்தவுங்க அவுங்க அனுபவத்தை சொல்லும் போது நாமலும் ரீவைண்ட் பண்ணி பார்கிரோம் இல்லை .

    ReplyDelete
  15. அழகான பதில்கள் சாரு....இனி அடிக்கடி எழுதுங்க...

    ReplyDelete