Friday, June 18, 2010

வேளாங்கண்ணி பயணம்

ரொம்ப நாட்களாக நானும் எதாவது எழுதனும்னு தீவரமா யோசிச்சுகிட்டு இருந்தேன்.எதை பற்றி எழுதுறதுன்னு ஒரே குழப்பம் சென்ற வாரம் வேளாண்கண்ணி போயிருந்தோம் சரி அதை பத்தி எழுதுவோம்னு பிள்ளையார் சுழி போட்டாச்சு. (ஜலீலா அக்கா , மலிக்கா இருவரும் தெரியாம எழுத சொல்லிட்டோம்னு மனசுல நினைக்கிறாங்க போல புரை ஏறுது)

லீவ்ல சென்னை போயிருந்தோம் பீச் போகலாம்னு பிளான் பண்ண நேரம் சுனாமி அலர்ட் கொடுத்துட்டாங்க , என்னடா நமக்கு வந்த சோதனைன்னு மனசை தேத்திக்கிட்டு மறுநாள் திருமலை போய் வெங்கடாசலபதியை தரிசிச்சுட்டு வந்துடோம் .

சரி அங்க தான் போக முடியலை இங்க எங்கயாவது போகலாம்னு முடிவு பண்ணி கமிட்டி கூடி வேளாண்கண்ணி போகலாம்னு முடிவு பண்ணி டாக்ஸிக்கு சொல்லியாச்சு 12.00 மணிக்கு வர வேண்டிய வண்டி ஒரு வழியா 1 மணிக்கு வந்து வீட்டை விட்டு கிளாம்பியாச்சு , போகும் போது அப்படியே மனோரா போயிட்டு போகலாம்னு பட்டுகோட்டை போய் அங்கு இருந்து மனோரா போயாச்சி எண்ணி 15 பேர் தான் எங்க குடும்பத்திலே மொத்தம் 8 பேர் , சரியான பராமரிப்பு இல்லாமல் ரொம்ப மோசமாக இருந்தது ஒரு பெட்டிகடை மட்டும் தான் , களங்கரை விளக்கம் எல்லாம் ஏற விடலை உடனே அங்கு இருந்து கிளம்பி வேளாண்கண்ணி போனோம் ரோடு அவ்வளவு நல்லா இருந்தது என் பொண்ணு நம்ம ஊர்ல கூட இப்படி எல்லாம் ரோடு இருக்கான்னு ஒரே ஆச்சிரியம் , சென்னை to குமரி போற ECR ரோடு ஒரு வழியா போயாச்சு , பசங்க எல்லாம் கடல்ல ஒரே ஆட்டம் தான் அன்னைக்கு அலை வேற பெரிசா இருந்துச்சு (காரணம் அம்மாவசை) என் சின்ன பொண்னையும் என் மச்சினரின் சின்ன பெண்னையும் நான் கைல புடுச்சுகிட்டு நிற்கிறேன் , வந்த ஒரு பெரிய அலைல பசங்க தடுமாறி விழுந்துட்டாங்க தூக்க போய் நானும் பேலன்ஸ் தவறி விழுந்திடேன். நீங்களே சொல்லுங்க தண்ணியில இருக்கும் போது பேலன்ஸ் பண்ண முடியாது தானே (நான் கடல் தண்ணிய சொன்னேன்) இந்த காட்சியை என்னவரின் அக்கா போட்டோ எடுத்துகிட்டாங்க வீட்ல வந்து என்னவ்ரிடம் காமிக்க.(யாரது போட்டோ எல்லாம் போட சொல்லுறது நோ அப்படியெல்லாம் சொல்ல கூடாது) ஒரு வழியா ஆட்டம் எல்லாம் முடிச்சுட்டு கிளம்பியாச்சு , அங்கு இருந்து மீன் , நண்டு , இறால் எல்லாம் வாங்கிட்டு அப்படியே திருவாரூர் வந்து அங்கு ஹோட்டல் தைலம்மைல டின்னர் சாப்பிட்டோம் , ஹோட்டலுக்கு பக்கதில தியேட்டர் சிங்கம் படம் நடக்குது , என் பெரிய பொண்ணு அம்மா சிங்கம் பார்துட்டு போகலாம்னு சொல்றா எப்படியோ ஒரு வழியா வீடு வந்து சேர்ந்து விட்டோம், வீட்ல வந்து என்னை வச்சு ஒரு மணி நேரம் லைவா காமெட் சோ நடத்தினா எனது மச்சினரின் பெரிய பொண்ணு ( வேற என்ன நான் கீழ விழுந்த கதை தான் இதுக்கெல்லாம நாங்க கலங்குவோமா , இது என்ன புதுசா வழக்கமா நடக்குறது தான்)

அப்பாடி ஒரு வழியா முடிச்சுட்டேன் இனிமேல் உங்கள் வேலை தான்.(கமெண்ட் எழுதுறது தான்) இனிமேல் நீ ஒண்ணும் எழுத வேணாம் தாயே சும்மா எல்லாருடைய பிளாக் படிச்சா போதும்னு சொன்னா கூட கவலை பட மாட்டேன்.

மறு நாள் பேப்பர்ல பார்தா வேளாங்கண்ணிக்கு சுனாமி அலர்ட் கொடுத்து இருக்காங்க நாங்க வந்ததிற்கு அப்புறம் ,என்னை காமெடி பீஸ் ஆக்கியவள் பின்னி நீங்க விழுந்ததுல , நில அதிர்வு ஏற்பட்டு சுனாமி வந்துட்டு போல அப்படின்னு சொல்றா வேற என்ன பண்ணுறது. எல்லாம் நம்ம நேரம்

15 comments:

  1. //வேளாண்கண்ணி போயிருந்தோம் சரி அதை பத்தி எழுதுவோம்னு பிள்ளையார் சுழி போட்டாச்சு. // ;) சுவாரசியமான ஆரம்பம். ;)

    //மறு நாள் பேப்பர்ல பார்தா...// சாரு படம் போட்டு இருந்தாங்களோ என்று எதிர்பார்த்துத் தொடர்ந்து படித்தேன். ;( படம் சேர்த்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் சாரு. ;)

    ReplyDelete
  2. மிகவும் அழகாக நகைசுவையாக எழுதி இருக்கின்றிங்க....//என்னை காமெடி பீஸ் ஆக்கியவள் பின்னி நீங்க விழுந்ததுல , நில அதிர்வு ஏற்பட்டு சுனாமி வந்துட்டு போல அப்படின்னு சொல்றா வேற என்ன பண்ணுறது// இது தான் சுனாமி வர உண்மையான காரணமா...இப்பொழுது தானெ தெரியுது...எல்லாம்...சும்மா தான் அக்கா...

    ReplyDelete
  3. என்னங்க நீங்க ஒரு மெகா தொடரை சட்டுன்னு இப்பிடியா திடீர்ன்னு முடிக்கிறது...!!

    :-))

    ReplyDelete
  4. நன்றி இமா , அலைபேசியில எடுத்த புகைபடங்கள் கொஞ்சம் டல்லா இருந்த மாதிரி இருந்தது அதான் அடுத்தமுறை படம் போட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி ஜெய்லானி என்னை வச்சு காமெடி எதுவும் பண்ணலைல கொஞ்சம் விரிவாக எழுதுவோம்னு தான் நினைத்தேன் ரொம்ப பெரிதாக இருக்குமோன்னு சுருக்கிவிட்டேன்.

    ReplyDelete
  6. ஆசியா அக்கா ரொம்ப நன்றி

    ReplyDelete
  7. ம்ம் நல்லா நகைச்சுவையா சொல்லிருக்கிங்க...

    ReplyDelete
  8. haa..haa,saru vizhuthathula tsunami-yaa? sema comedy! :D:D:D

    ReplyDelete
  9. அக்கா அசத்திடீங்க இதுபோல் அப்பப்ப எழுதுங்க. அப்பதானே ஒரு விறுவிறுப்புகிடைக்கும்.

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி மஹி , வாங்க மல்லி நீங்கள் சொன்ன மாதிரி எழுதியாச்சு

    ReplyDelete
  11. நல்லா இருக்கு நல்ல சிறுகதை அசத்திட்டிங்க சாரு.

    ReplyDelete