Friday, June 11, 2010

ஜோக்ஸ்

நான் படித்து ரசித்தவை தான் நன்றி www.ikolam.com

1)“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ+2 படிக்கிரடா

5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பிசிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என்“செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...எப்பூடி?

கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

கவிதை
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு,
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு,
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம்

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

9 comments:

 1. ஆஹா..இன்று காலை நல்லா விடிச்சுச்சு...நல்ல ஜோக்ஸ் படித்து சந்தோசமாக இருக்கின்றது...அதிலும் பல்லி பலனும்,love letter & examயிற்கு வித்தியாசம் ஜோக் மிகவும் நன்றாக இருந்தது...

  ReplyDelete
 2. ரசிக்க வைத்த ஜோக்ஸ்!!

  ReplyDelete
 3. ஜோக்ஸ் நல்லா இருக்கு.என் மகள் ஊரில் இது மாதிரி நிறைய ஒரு நோட்டில் எழுதி வச்சிருக்கா,ஆனால் இது அத்தனையும் புதுசு.

  ReplyDelete
 4. எல்லாமே ந‌ல்லாருக்குங்க‌...குறிப்பா ரெண்டாவ‌தும், நாட்டாமையும்...வாய் விட்டு சிரிச்சுட்டேன் :))

  ReplyDelete
 5. ஜோக்ஸ் நல்லா இருக்கு.

  ReplyDelete
 6. கடைசியா சொன்னது எங்க சங்கம் தாங்க. :-))

  ReplyDelete
 7. கருத்து சொன்ன அனைவருக்கும் ரொம்ப நன்றி

  ReplyDelete